மலையகத்தின் ஆக்கப்பூர்வமான சேவைகளுடன் வளர்ந்து வரும் இளையோர் அமைப்பான நுவரெலியா SMART YOUTHS அமைப்பின் மற்றுமொரு சமூக வேலைத்திட்டம் அமைப்பின் தலைவர் சுந்தரம் வினோத் சுந்தர் தலைமையில் 04/12/2022 அன்று அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பொருளாதார ரீதியில் மலிந்து காணப்படும் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான, பாடசாலை பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகள் என்பன சுமார் 100 மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான முழு அணுசரணையையும் வடமாகாணத்தில் இயங்கிவரும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த நிகழ்வில் பல பிரதேசங்களிலிருந்து வருகைத்தந்திருந்த பெற்றோர்கள், மாணவர்களுக்கான போதைப்பொருள் மற்றும் சமூக சீர்கேடுகள் தொடர்பான சமூக விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.