ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவர் கடமை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை அபகரித்து சென்றுள்ளதாக நிட்டம்புவ தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த தாதி வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நிட்டம்புவ தலைமையக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாதியின் கணவர் பேலியகொட தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான காவல் பரிசோதகர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாதி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கையை வெட்டி கைப்பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நிட்டம்புவ காவல் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.