யாழ். உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவு தினம்!

யாழ்ப்பாணம் உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவு தினம் யாழ். மத்தியகல்லூரிய்  தந்தை செல்வா கலையரங்கில் 2022.12.04 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது 25வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியினரால்  மாணவர்களிடையே 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றதோடு 25ஆவது ஆண்டு நினைவு மலரும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

உயர்தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களால் கலைநிகழ்வுகளும்  முன்னெடுக்கப்பட்டதோடு, 25ஆவது ஆண்டினை வெளிப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதன் பொழுது இலங்கை உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மகேஷ் எதிரிசிங்க, யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் பிரபாகரன், யாழ். உயர் தொழிலுநுட்ப கல்வி  நிறுவனத்தின் பணிப்பாளர் கோகிலன், உயர்தொழில்நுட்பட கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், யாழ். உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உயர் கல்வியமைச்சின் கீழ் 1996ஆம் ஆண்டளவில் யாழில் ஆரம்பமான உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமானது  மாணவர்களுக்கு தேசிய உயர்கல்வி  டிப்ளோமாவினை  வழங்குவதோடு தற்பொழுது யாழ். நகரில் எட்டு கற்கை நெறிகளை வழங்கி வருவதோடு நாடாளாவியரீதியில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தரும்  மாணவர்கள் உயர்கல்வியை தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply