அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் இன்றைய தினம் மற்றொரு மாபெரும் இரவு விருந்துக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்தில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரமும் இதேபோன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கும் அலரிமாளிகையில் இரவு விருந்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .