ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்த மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் நேற்று இரவு திடீர் சோதனை நவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்த 18-33 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட 13.58 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 போதைப்பொருள் காப்சூல்கள் மேலதிக விசாரணைகளுக்காக மில்லனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.