கொக்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (06) காலை உயிரிழந்துள்ளார்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், டேங்கரில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தம்புத்தேகம சிறிமாபுர பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.