வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றி தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் உள்ளிட்ட அரசியல் அமைப்புக்கள் உள்ளகத் தயார்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
செலவுத் திட்ட இறுதி விவாதத்திற்கு வரும் மக்கள் பிரதிநிதிகளை வழி மறிப்பது, அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல திட்டங்களில் ஈடுபடவுள்ளமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறு சபாநாயகரின் தலையீட்டின் ஊடாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பாதுகாப்புத் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
எதிர்வரும் 8ஆம் திகதி வான்கார்ட் சோசலிசக் கட்சி நாடு தழுவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தை சுற்றிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.