2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் , சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும் புத்தளத்தில் தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது புத்தளம் மாவட்ட தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ரணிலின் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.