கார்த்திகை விளக்கீட்டு தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் கார்த்திகை தீபமேற்றுவதற்குரிய விளக்குகளின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி,மருதனார்மடம் உள்ளிட்ட பல இடங்களில் தெரு ஓரங்களில் அதிகளவான சிட்டிகள் விற்பனையாகிறது.சிட்டியின் தரம் மற்றும் அளவுக்கு ஏற்பட்ட 20 ரூபா முதல் சிட்டிகள் விற்பனையாகிறது.
எனினும் கடந்த காலங்களைப் போன்று சிட்டி வியாபாரம் களை கட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA