ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கியதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க மீது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அது தொடர்பான விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தனது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டதால் பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்கட்டண உயர்வை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் நிராகரித்துள்ள நிலையில், மின் கட்டண உயர்வை அமைச்சர் ஏன் கூறுகின்றார் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.