நாட்டுக்குள் வருகை தந்த 2 சொகுசுக் கப்பல்கள் – கொட்டும் டொலர்கள்

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வந்த இரண்டு சொகுசு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சாதனை வருமானம் கிடைத்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
அதன்படி கடந்த நவம்பர் 30ஆம் திகதி வந்த கப்பலில் 551 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 110 வாகனங்களில் யால பூங்காவை பார்வையிட வருகை தந்ததன் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அன்றைய தினம் 6,219,560 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
 
மேலும், டிசம்பர் 05 ஆம் திகதி வந்த கப்பலில் 86 சுற்றுலாப் பயணிகள் 18 வாகனங்களில் யால பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். 9,81,981 வருவாய் கிடைத்தது.
 
இந்த இரண்டு நாட்களில் மட்டும் 148 உள்ளூர் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
 
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் போது யால பூங்காவை பார்வையிட அதிக நேரம் கிடைக்கும் வகையில் பயணச்சீட்டு ஜன்னல்களை திறக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
 
மேலும், எதிர்காலத்தில் சொகுசுக் கப்பல்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவார்களாயின் சுற்றுலா அமைச்சுடன் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *