இந்த ஆண்டில் மாத்திரம் பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய்

ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரை பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார்.

இதன்போது தெரிவித்த அவர், நடப்பாண்டில் ஜுன் மாதம் வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே 664 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 133 ஆக இருந்ததாகவும், நித்யானந்த ராய் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply