ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரி படுகாயம்;- 3 மணி நேர சிகிச்சை

பாராளுமன்றம் அருகே நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது, மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எச். ஜனகாந்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, குறித்த பொலிஸ் அதிகாரியின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டு மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

போராட்டத்தின் போது, ​​ஆர்ப்பாட்டக்காரர்கள், வீதி தடுப்பைத் தூக்கி எறிய முயன்ற நிலையில் அதனை தடுக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெறக் கோரி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply