மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 33 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக ஆபத்தான வீதிகளை கொண்டுள்ள மாலியில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் 26 இறப்புகள் பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

Leave a Reply