இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது ஆக்கீல் கான் வெற்றி..!

இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது ஆக்கீல் கான் வெற்றி..!

(றொஸான் முஹம்மட்)

இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் Pro Knights Chess Academy சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது I.K.முஹம்மட் ஆக்கில் கான் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இப் போட்டித்தொடர் நொவிஸ் முறைப்படி மூன்று மாகாணங்களான கிழக்கு, வடக்கு, ஊவா ஆகிய மாகாணங்களை மையப்படுத்தி 2021.07.31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2 நாட்கள் நிகழ்நிலை மூலமாக நடைபெற்றது.

இப்போட்டிகள் 8 சுற்றுக்களைக்கொண்டதாக அமைந்திருந்ததுடன் சுமார் 115 ஆண் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சாய்ந்தமருது Pro Knights Chess Academy சார்பாக போட்டியிட்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி தரம் 7 மாணவன் I.K.முஹம்மட் ஆக்கில் கான் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகி அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இப்போட்டி தொடரில் வெற்றிபெற்றதன் மூலமாக அடுத்த உயர் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
Pro Knight Chess Academy யின் பணிப்பாளர் ஸாக்கீர் அஹமட் அவர்களின் பயிற்றுவிப்புடனேயே ஆக்கில் கான் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply