பல வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னர் புதிய எரிவாயு தொகுதிகள் விநியோகம்!

<!–

பல வெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னர் புதிய எரிவாயு தொகுதிகள் விநியோகம்! – Athavan News

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிவாயு நிறுவனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன.

இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில் வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்திலான நிறுவனத்தின் வர்த்தக குறியீடு (Logo) பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

அதேநேரம், லாப்ஸ் நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் மூடியில் நீல நிற பின்னணியில்; மஞ்சள் நிறத்திலான நிறுவனத்தின் லோகோ பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு தொகுதிகள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.


Leave a Reply