பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்திற்கு சரத்வீரசேகர கண்டனம்!

பிரியந்த குமார படுகொலை சாதாரண விடயம் என பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு சென்று உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களில் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை பார்த்ததாகவும் அந்த கூற்று நிராகரிப்பு தன்மையை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த படுகொலை குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் கண்டணமும் வெட்கமும் வெளியிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தமை மாத்திரமே ஆறுதலான விடயம்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பு!

Leave a Reply