யாழ். துன்னாலையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து ஒரு தொகை போதை பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை பொருளையும் நெல்லியடி பொலிஸாரிடம், இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியப் பயணத்தை சம்பந்தன் ஏன் பிற்போட்டார் என தெரியாது! மாவை

Leave a Reply