முப்பது லட்சம் மதிக்கத்தக்க அபின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முப்பது லட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில், குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபள்யூ.எஸ்.எதிரிசிங்க தலைமையிலான சுற்றிவளைப்பின் போதே அபின் போதைப் பொருளும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டள்ளனர்.

வாழைச்சேனை அல் அக்ஷா வீதியில் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டினை சுற்றி வளைத்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் அபின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஓட்டமாவடி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply