பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் இரங்கல்!

<!–

பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் இரங்கல்! – Athavan News

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பாகிஸ்தான் இராணு செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 13 வீரர்கள் அகால மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் இராணுவ கூட்டு கமிட்டியின் தலைவர் நதீம் ராஸா மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா இரங்கல் தெரிவித்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply