தலவாக்கலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி பலத்த காயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை, நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா– ஹற்றன் பிரதான வீதி, சென்.கிளயார் பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி  சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் சாரதி மாத்திரம் பயணித்துள்ளதாகவும் அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும்  அவரின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply