மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை அமைத்துக்கொடுத்தார் செந்தில் தொண்டமான்!

மழை காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை இ.தொ.காவின் உபத்தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் புனரமைத்து கொடுத்துள்ளார்.

மாணவர்களே நாட்டின் நாளைய சொத்துக்கள். மாணவர்களை பாதுகாத்து அவர்களை வழிநடத்த வேண்டியது நமது பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொரகொல்ல பாடசாலைக்கான பாதை மழை காலப்பகுதியில் பாதிக்கப்பட்டு சறுக்கும் காரணத்தினால்  மாணவர்கள்  பாடசாலைக்கு நடந்து செல்ல  முடியாத சூழல் தொடர்ந்து காணப்பட்டது.

இது குறித்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் செந்தில் தொண்டமானிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.

செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply