மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவதை எதிர்த்து, மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அம்மாசி நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மெராயாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று லிந்துலை, மெராயா நகரில் (11/12/2022) நண்பகல் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக உட்பட தொழிலாளர்கள், வர்த்தக சமூகம், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல்வாதிகளின், மின்சார சபையினரின் முறையற்ற நிதி நிர்வாகம், ஊழல்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நஸ்டங்களை மக்கள் மீது சுமத்துவதை வன்மையாக கண்டித்ததோடு மீண்டும் கட்டண ஊயர்வை ஏற்றுக்கொள்ள இயலாதெனவும் கட்டணத்தை செலுத்த முடியாது எனவும் உறுதி மொழி மேற்கொண்டனர்.