இனி விழுந்தாலும் விதையாக விழுவோம் – விருட்சமாக மீண்டெழுவோம்! – ஜீவன் எம்.பி.

அடிபட்டு அடிபணிந்து வாழ்ந்ததும் போதும் என்றும் இனி விழுந்தாலும் விதையாக வீழ்ந்து விருட்சமாக மீண்டெழுவோம் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எம்மில் சிலர் தோல்வியைக் கண்டு அஞ்சுகின்றனர். துவண்டுபோய் விடுகின்றனர். தோல்வியைக்கூட எமக்கு சாதகமான விடயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எமது பலம் எது, பலவீனம் எது என்பதை அதன் ஊடாக அறியலாம். எங்கு தவறு இடம்பெற்றுள்ளது என்பதையும் உணரலாம். தோல்வி என்பது சிறந்த ஆசான். பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.

தோற்றுவிற்றால் எம்மை ஒதுக்கு இதே சமூகம்தான், தோல்வியில் இருந்து மீண்டுவிட்டால் வாழ்த்தி வரவேற்கும். மாலைபோட்டு மரியாதை செலுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்

நாம் அடிமட்டத்தில் இருக்கின்றோம். இனியும் பின்நோக்கி செல்ல இடமில்லை. எனவே, நாம் முன்வேறவேண்டும். அதற்காக மட்டுமே முயற்சிக்க வேண்டும்.

மேலும் 30 வருடங்கள் எமக்கு பிரஜா உரிமை இருக்கவில்லை. பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளோம். இந்நிலையில் போதைப்பொறிக்குள்ளும் நாம் சிக்கிவிடக்கூடாது.

இந்த விடயத்தில் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு மேலும் அடிபணிந்தோ, அடிவாங்கியோ வாழ முடியாது. முன்னேற வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *