பதுளை பஸ்சறை பிரதான பாதையில் பதுளை- இலங்கை போக்குவரத்து சபை முன்பாக பாதையினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.
குறிப்பாக இன்று காலை 09. 45 முதல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
பதுளை இஸ்பிரிங்வெலி பகுதியை சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறித்த பதுளை, இஸ்பிரிங்வெலி பிரதான பதையினை சீர் செய்து தருமாறு பல முறை கோரிகை வைத்த போதிலும் இன்று வரையில் பாதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கபடாத நிலையில்.
இன்று மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
கைகளில் பதாதைகளை ஏந்தி கொண்டு. கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டத்தினால் பதுளை பஸ்சறை பிரதானபாதையினை பயன்படுத்தும் வாகனங்கள் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகிறன.