19 வயது மகளை கொடூரமாகத் தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த தனது 19 வயது மகளை கடுமையாக தாக்கி பாலியல்  துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  40 வயதுடைய தந்தை ஒருவர்  நேற்று (11) கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.  

பாதிக்கப்பட்ட மாணவி  தனது தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், சுகவீனமுற்றிருந்த சகோதரர்கள் இருவருக்கும் வைத்திய சிகிச்சைக்காக தாய் வீட்டை விட்டு வெளியேறியபோது வீட்டில் இருந்த தந்தையே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் தலைக்கு எண்ணெய் தடவுமாறும் தந்தை தனது  அவரது அறைக்கு  அழைத்து முகத்தில் முத்தமிட்டதாகவும், இதனை விரும்பாத தான் தப்பிக்க முயற்சித்தபோது தன்மீது தாக்குதல் நடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும் குறித்த மாணவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *