பறவைகளால் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக புதிய நெல் விதைக்கும் இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் முதன் முதலாக இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரம், விதைகளை விதைக்கும்போது, அவற்றை மயில் உள்ளிட்ட பறவைகள் உண்ண முடியாதவாறு தடுக்கும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மயில்களின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், நெல் விதைப்புக்கு பின்னர் ஏற்படும் பாதிப்புக்களும் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல் விதைப்பு இயந்திரங்களின் விலை சந்தையில் 72 000 ரூபா வரையில் உயர்ந்துள்ள நிலையில், இந்த புதிய இயந்திரம் 17 000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.