பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு வேலைத் திட்டம்

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு வேலைத் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இந்த செயல்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகள், இம்சைகள் வெறுப்புணர்வூட்டக் கூடிய சம்பவங்கள் இடம்பெறும்பொழுது உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் அவசர தொலைபேசி இலக்கங்கள் கொண்ட சுவரொட்டிகள் பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களிலும் ஒட்டப்பட்டன.

இந்த செயற்திட்டம் வன்முறைக்கெதிரான அக்கறையுள்ள தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்,

குறித்த செயல்திட்டம் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அமுல்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *