மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை பகுதியில் வைத்து 2400 கிலோ எடையுடைய மஞ்சள் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பட்டா ரக வாகனத்தில் மஞ்சளை கடத்திச் சென்றவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது.
மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.