விடுதலைப் புலிகள் மீள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை! அமரவீர

நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது விடுதலைப் புலிகள் மீள் உருவாவதற்கோ ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனில், விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிப்பாராயின், அவ்வாறானவர்களின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை.

சாணக்கியன் உள்ளிட்டோரின் வாக்குகளை அவர்களே வைத்துக்கொள்ளட்டும், அவர்களின் நிபந்தனைகளுக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை முடிந்தவரை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் மக்களிடம் கோரிக்கை!

Leave a Reply