ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டிய சஜித் தரப்பின் முக்கிய உறுப்பினர்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கான வல்லமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எனவே, சர்வக்கட்சி அரசாங்கம் அமைத்தேனும் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

2002 காலப்பகுதியில் சரிவை சந்தித்திருந்த பொருளாதாரத்தைக்கூட ரணில் விக்கிரமசிங்க மீட்டிருந்தார் எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

Leave a Reply