பஸ் விபத்து: சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இக்கிரிகொல்லாவ பகுதியில் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 08 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

அவர்களில் கிளிநொச்சி, அனியங்குளம் பகுதியை சேர்ந்த 26 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பஸ் சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்த போரா சமூகத்தின் ஆன்மீக தலைவர்!

Leave a Reply