அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது! விதுர

அரசாங்கம் தற்போது செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம் புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது- என்றார்.

விமான பயணிகளுக்கான புதிய சுகாதார வழிமுறைகள்; அடுத்த ஆண்டு முதல் அமுலில்..!

Leave a Reply