கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு மகத்தான வரவேற்பு!

மெய்ஜி கோப்பை (MEIJI CUP – 2022) இலங்கை ஓபன் கராத்தே சுற்றுப் போட்டி – 2022 இல் தங்கப்பதக்கத்தை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

வென்னப்புவ எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறித்த கராத்தே சுற்று போட்டியில் பல்வேறு திணைக்கள கராத்தே அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தெரிவு செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பங்கு பற்றி இருந்தனர்.

அதில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் T. பிரசாத் பங்கு பற்றி இருந்த நிலையில், 01 தங்க பதக்கத்தையும் 01 வெள்ளி பதக்கத்தையும் பெற்று தனது வெற்றியை பதிவு செய்திருந்தார்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு.துஷார உபுல்தெனிய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பதக்கங்களை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ்ப்பாண சிறைச் சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது

வெற்றியீட்டிய வீரருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.

அந்நிகழ்வில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர், யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதம பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply