ரணிலே அடுத்த ஜனாதிபதி – உறுதிப்படுத்திய முக்கிய நபர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அல்ல, நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்கவே நாட்டின் வேட்பாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply