அன்ரன் பாலசிங்கத்தின் 16ம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

முன்னதாக தீபமேற்றப்பட்டு அன்ரன் பாலசிங்கத்தின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply