முக்கியமான தருணத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கிடைத்த மருத்துப்பொருட்கள்

சர்வதேச மருத்துவ அபிவிருத்தி நிறுவனத்தினால் (IMHO) யாழ். போதனா வைத்தியசாலைக்கு, 19 இலட்சம் ரூபா பெறுமதியிலான மருந்து பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

IMHO நிறுவனம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பல உதவிகளை செய்து வருகின்ற நிலையில் இன்று  வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து பொருட்களை அன்பளிப்பாக வழங்கினர்.

மேலும் அந்நிறுவனத்தின் பங்களிப்பில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

IMHO நிறுவனத்தின்  முரளி அவர்கள் அமெரிக்காவில் இருந்து வருகை தந்து மேற்படி மருந்து பொருட்களை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியிடம் கையளித்தார்.

Leave a Reply