புத்தளத்தில் தொங்கு பாலம் திறந்து வைப்பு

புத்தளம் எலுவாங்குளத்திலிருந்து வில்பத்து தேசிய சரணாலயத்திற்கான புதிய தொங்கு  பாலத்தை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் அஹியூபேர்ட் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

புத்தளம் எலுவாங்குளத்திலிருந்து வில்பத்து சரணாலயவரையிலான 66 மீற்றர் தொங்குப் பாலமொன்று ஜேர்மன் நாட்டின் நிதியுதவியின் 40 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

நிகழ்வில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நினைவுச் சின்னமாக மரத்தால் செய்யப்பட்ட இரண்டு யானைகளின் உருவம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் ஜேர்மன் தூதுவருக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply