மூதூரில் பிள்ளையாருக்கு நேர்ந்த கதி – தொடரும் விஷமிகளின் அட்டூழியம்

 மூதூர் – மலையடி பிள்ளையார் ஆலயத்தை கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நடபட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை பகல் வேளையில் நாசகாரிகள் அவ்விடத்திலிந்த  நந்திகொடியை பிடுங்கி வீதியோரத்தில் வீசி விட்டு ,அடிகல்லான மூலக்கல் இருந்த பகுதியை இயந்திரம் கொண்டு முற்றாக அழித்துள்ளதாக மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

  இந்துமதத்தையும் இந்து மக்களையும் அவமதிக்கும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதை எமது மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன் இதனை பிரதேச செயளாலருக்கு படம் மூலம் உடன் அனுப்பிவைத்துள்ளோம். தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் பிரதேச செயளாலர் பதில் தரவில்லை.

இந்த நிலையில் இதற்கு முன்பு இரண்டு தடவை எமது சமய கொடியான நந்திகொடியை அவ்விடத்திலிருந்து களவாடி சென்றதும் கட்டுமானத்திற்கான அங்கு வைக்கபட்டிருந்த மணல் மற்றும் கருங்கல்களை பரத்தி அழித்ததையும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இவ்வாறன செயல்பாடு விடயமாக பிரதேச  செயளாளரும் பொலிசாரும் நடவடிக்க எடுக்கவேண்டும் என்பதை மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தானராகிய நாங்கள் கேட்டுகொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply