மின்சாரம் தாக்கி  சிறுவன்  பலி!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடுப் பகுதியில் மின் ஒட்டு தொழிலகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் மின் இணைப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

உடையார்கட்டு பகுதியில் வசித்துவரும் சுந்தரமூர்த்தி தேவன் எனும் 17 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் நிகழ்ந்துள்ளது.  சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக   புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி  சிறுவன்  பலி! appeared first on உதயன் | UTHAYAN.

Leave a Reply