கடந்த வாரம் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் நிலை காரணமாக இலங்கையில் அதிகமான பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டிருந்தது.
இதில் ஊவா மாகாணம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான பிரதேசமாக காணப்பட்டது.
இந்நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763 வீடுகள் பகுதி அளவிலும் 44 வீடுகள் முற்றாகவும் சேதம் அடைந்திருந்தன.
குறித்து வீடுகளை சீர்திருத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக அரசாங்கத்தினால் பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு பசறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் 28 கிராம பிரிவுகளுக்கு உட்பட்ட 185 குடும்பங்களுக்கு குறித்த காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பசறை பிரதேச சபை உறுப்பினர்கள் என்போர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.