மலையகத்தில் 5000 வீடுகள் ஆபத்தில்!!

நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அதிக ஆபத்தைக் கொண்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும், இவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்தும் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்  திசாநாயக்க வின் நேற்றைய வாய்மூல விடை காண வினாவுக்கு பதில் அளித்து உரையாற்றிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அதிக ஆபத்தைக் கொண்ட வீடுகள் நுவரெலியாவில் (2089) மற்றும் மாத்தளையில் (1279) கண்டியில் (2001) வீடுகளும் காணப்படுகின்றது என்றார்.

மேற்படி வீடுகளில் வாழ்வோரை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான துரித வேலை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அதிக ஆபத்தான பகுதிகளில் உள்ள வீடுகளை பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்த வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான வேலை திட்டங்கள் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பதுளை, நுவரெலியா, காலி ,மொனராகலை, கண்டி,களுத்துறை ,ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள கட்டட நிர்மான பொருட்களுக்கு அமைய போதுமானது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply