குப்பைக்கு தீமூட்டியதால் ஏற்பட்ட விபரீதம்! – கொழும்பில் பற்றியெரிந்த படகு

கொழும்பு – மட்டக்குளி படகுதுறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் இரண்டு படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குப்பையை தீமூட்டிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply