ஒற்றையாட்சிக்குள் முடங்கி போயுள்ள தரப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்ககூடாது-எச்சரிக்கும் கஜேந்திரகுமார்!

ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பிற்குள் முடங்கிப்போயுள்ள தரப்புகளிற்கு தமிழ் மக்கள் வாக்குகளை வழங்கினால் இந்த தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பயணம் முடிவிற்கே வரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் தனக்கு கட்சியின் செயலாளர் பதவி தரவில்லை என்று பிரிந்து சென்றதாகவும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கங்கள் இந்தியாவின் முகவர் அமைப்புக்களும் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று பிரிந்து சென்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவர்கள் பிரிந்து நிற்பதற்கு காரணம் கொள்கையல்ல என்றும் பதவி மோகத்தாலே பரிந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைவரும் கொள்கை என்ற பெயரில் இனத்தை விற்பதற்கு தயாராகியுள்ளனர்.

யார் இந்தியாவிற்கு அதிகமாக விசுவாசமாக நின்று இனத்தை விற்கலாம் என்பதே அவர்களிற்கிடையிலான போட்டி. அதற்காவே பிரிந்து நிற்கின்றார்கள்.

இவை அனைத்தும் தெரிந்தும் எம்மை ஆதரிக்காமல் பிரிந்து நின்று ஒற்றையாட்சிக்குள் முடங்கிப்போயுள்ள தரப்புகளிற்கு வாக்குகளை வழங்கினால் இந்த தேர்தலுக்கு பின்னரான தமிழர் அரசியல் உரிமை பயணம் முடிவிற்கே வரும்.எமது அரசியலும் ஒற்றையாட்சிக்குள் நிரந்தராமாக முடங்கிப்போகும். எனவே மக்களாகிய நீங்களே முடிவெடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply