எமது நிலங்களில் வருமானம் ஈட்டும் இராணுவம் – தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்.!

75ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்.வலி வடக்கு பிரதேசத்தில் படையினரின் வசம் இருந்த 109 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் சொந்த காணிகளில் இராணுவம் சோள பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு வருமானம் ஈட்டி வருவதாகவும் ஆனால் தாம் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கி வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான ஏனைய காணிகளையும் விரைவாக ஜனாதிபதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a Reply