ஜக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பமா..?? ஜே.வி.பி தலைவரை புழந்து தள்ளிய சரத் பொன்சேகா .!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கவை மதிப்பதாகவும் அவர் தனக்கு எதிரி இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அநுரகுமார திஸநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியுடன் சிவில் சமூக உடன்படிக்கையை ஏற்படுத்த தாம் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற குழு ஒன்று தன்னுடன் இணையவுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திஸநாயக்கவின் அரசியல் மேடைக்கு அருகில் எந்த நேரத்திலும் நடமாட முடியும் எனவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply