சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை- முக்கிய எம்.பி திடீர் முடிவு!

இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அரசாங்கத்திலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply