தமிழர்களின் திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் நாளே- நாளைய 4ஆம் திகதி- ஞா.சிறிநேசன் சுட்டிக்காட்டு!

நாளைய 4ஆம் திகதி என்பது ஒரு கொண்டாட்டத்திற்குரிய நாளில்லை என்றும் மாறாக தமிழ் மக்களின் திண்டாட்டத்தை வெளிப்படுத்துகின்ற கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற  தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்தும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும் வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ள கருப்பு சுதந்திர தின  எழுச்சிப் பேரணி ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எனவே கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் தேசிய உணர்வுள்ள அனைவரையும் நாளை பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஞா.சிறிநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply