இலங்கையில் இம்முறை தேசிய கொடி விற்பனையில் வீழ்ச்சி – வர்த்தகர்கள் கவலை.!

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் எதிர்கட்சிகள் பல நிகழ்வினை புறக்கணித்துள்ளன.

இந்நிலையில், தேசியக் கொடி விற்பனையில், வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில், தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசியக் கொடி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply