10 கிலோ அரசியும், 2 கிலோ சீனியும் – அரசின் பண்டிகைக்கால சலுகை!

பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிப்பதற்கு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

டிசம்பர் 31ஆம் திகதி வரை இதற்கான சந்தர்பபம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சதொச நிவாரணப் பொதிக்கு சீனியை கொள்வனவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு கிலோகிராம் அரிசி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,998 நிவாரணப் பொதிக்கு 10 கிலோ கிராம் சம்பா அரிசி வழங்கப்படுகின்றது. அந்த நிவாரணப் பொதியைத் தயாரிக்கும்போது, 2 கிலோ கிராம் உள்நாட்டு சிவப்பு சீனியும் வழங்குகின்றோம்.

சில சதொச விற்பனை நிலையங்களில் சிவப்பு சீனி போதிய கையிருப்பு இல்லாத நிலையில், அதற்கு பதிலாக என்ன கொள்வனவு செய்வது என்ற கேள்வி எழுந்தது.

எனவே நேற்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நிவாரண பொதிக்கு சிவப்பு சீனியை கொள்வனவு செய்ய முடியாதவர்கள் அதற்கு பதிலாக மேலதிகமாக 2 கிலோ கிராம் சம்பா அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சதொசவில் போதியளவு பொருட்கள் கையிருப்பில் இல்லை என நுகர்வோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பந்துல உறுதியளித்தபடி சதொசவில் போதியளவு பொருட்கள் கையிருப்பில் இல்லை! நுகர்வோர் குற்றச்சாட்டு

Leave a Reply